”எப்போது வேண்டுமானாலும் பாஜக கூட்டணி முறியலாம்”- துரை வைகோ

தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது இயற்கையாக அமைந்த கூட்டணி அல்ல. கூட்டணி கட்சித் தலைவர்கள் வேறு வழியின்றி அந்த கூட்டணியில் இணைந்துள்ளனர்.
சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடுபுதிய தலைமுறை

பாஜக கூட்டணி கட்சிகளுடன், INDIA கூட்டணி கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, திருச்சி தொகுதியில் எம்.பி.யாக தேர்வாகியுள்ள துரை வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளார்களிடம் பேசியபோது,

”தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது இயற்கையாக அமைந்த கூட்டணி அல்ல. கூட்டணி கட்சித் தலைவர்கள் வேறு வழியின்றி அந்த கூட்டணியில் இணைந்துள்ளனர். எனவே NDA கூட்டணியில் எப்போது வேண்டுமென்றாலும் முறிவு ஏற்படலாம்.

எனவே INDIA கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள், NDA கூட்டணியில் உள்ள பாஜக அல்லாத சில தலைவர்களை தொடர்புகொண்டு, மறுபடியும் சர்வதிகார ஆட்சி மீண்டும் இந்தியாவில் வந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தியதோடு அதற்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்றும் கேட்டிருக்கின்றனர்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com