\
சுஷாந்த் சிங் போதைப்‌பொருள் உட்கொள்பவரா ? ரியாவிடம் விசாரணை !

சுஷாந்த் சிங் போதைப்‌பொருள் உட்கொள்பவரா ? ரியாவிடம் விசாரணை !

சுஷாந்த் சிங் போதைப்‌பொருள் உட்கொள்பவரா ? ரியாவிடம் விசாரணை !
Published on: 

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில், அவரது காதலி ரியா சக்ரவர்த்தியிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இன்று விசாரணை நடத்தினர்.

மரிஜூவானா எனப்படும் போதைப்பொருளை உட்கொள்ளும் பழக்கம் சுஷாந்த் சிங்கிற்கு இருந்ததாக ரியா சக்ரவர்த்தி கூறியிருந்தார். சுஷாந்த் சிங் கொஞ்சம் கொஞ்சம் நஞ்சு கொடுத்து கொல்லப்பட்டதாக அவரது தந்தை கே.கே. சிங்கும் குற்றஞ்சாட்டியிருந்தார்‌.

அதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் ஷாவிக் சக்ரவர்த்தி, சுஷாந்த் சிங்கின்‌ வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டா ஆகிய இருவரையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் அண்மையில் கைது செய்தனர். அதன் பின்னர், போதைப் பொருள் விவகாரம் தொடர்பான விசாரணையில் இணைந்து கொள்ளுமாறு ரியா சக்ரவர்த்திக்கு போதை‌ப்பொருள் தடுப்புப் பிரிவினர் இன்று ‌காலை நோட்டீஸ் வழங்கினார்.

இதனையடுத்து ரியா, மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இன்று மதியம் ஆஜராகி, அவர்களது கேள்விக‌ளுக்குப் பதிலளித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com