\
சட்டீஸ்கரில் 6 வாகனங்களுக்கு தீ வைத்த நக்சலைட்டுகள்

சட்டீஸ்கரில் 6 வாகனங்களுக்கு தீ வைத்த நக்சலைட்டுகள்

சட்டீஸ்கரில் 6 வாகனங்களுக்கு தீ வைத்த நக்சலைட்டுகள்
Published on: 

சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் 6 வாகனங்களை தீ வைத்து எரித்தனர். மேலும் எடை போடும் மையங்கள் இரண்டையும் அவர்கள் தீக்கிரையாக்கினர்.

பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள குடக் சுரங்கத்தில் இச்சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர். எரிக்கப்பட்ட வாகனங்கள் அனைத்தும் சுரங்கத்தில் இருந்து பாக்சைட் கனிமத்தை எடுக்கப் பயன்படுத்தப்படுபவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவோயிஸ்டுகள் தீ வைப்பதை கண்டு காவலர்கள் ஓடிவந்தனர். இதனால் மாவோயிஸ்டுகள் தப்பி ஓடி விட்டதாக காவல் துறையினர் கூறினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com