\
2016- நக்சல்கள் அதிகம் கொல்லப்பட்ட ஆண்டு: மத்திய அரசு தகவல்

2016- நக்சல்கள் அதிகம் கொல்லப்பட்ட ஆண்டு: மத்திய அரசு தகவல்

2016- நக்சல்கள் அதிகம் கொல்லப்பட்ட ஆண்டு: மத்திய அரசு தகவல்
Published on

2016-ம் ஆண்டில் நக்சல்கள் அதிக அளவில் கொலை செய்யப்பட்டனர் என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் கொல்லப்பட்டது கடந்த ஆண்டில்தான். முந்தைய வருடத்தோடு ஒப்பிடும் போது 2016ல் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் எண்ணிக்கை 150 சதவீதம் அதிகம் என மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் மக்களவையில் தெரிவித்தார்.

2015-ம் ஆண்டில் 89 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். ஆனால், 2016-ம் ஆண்டில் 222 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது 150 சதவீதம் அதிகம் என அவர் கூறினார்.

இடதுசாரி தீவிரவாதம் பரவியுள்ள 9 மாநிலங்களில் 44 மாவட்டங்களில் 5,411.81 கி.மீ. அளவிற்கு சாலைகள் போடவும், 126 பாலங்கள் கட்டவும், வடிகால் கட்டுமானங்களுக்காகவும் அரசு ரூ 11,724.53 கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளது என்றும் ஹன்ஸ்ராஜ் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com