பாராமவுண்டிங் செய்த போது  கடலில் மயங்கி  விழுந்த கடற்படை அதிகாரி  - வீடியோ!

பாராமவுண்டிங் செய்த போது கடலில் மயங்கி விழுந்த கடற்படை அதிகாரி - வீடியோ!

பாராமவுண்டிங் செய்த போது கடலில் மயங்கி விழுந்த கடற்படை அதிகாரி - வீடியோ!

கர்நாடக மாநிலம் கார்வார் பகுதியைச் சேர்ந்த இந்திய கடற்படை கேப்டன் மதுசூதன ரெட்டி. தன் குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த அவர், பாராமவுண்டிங் எனப்படும் சாகச விளையாட்டில் ஈடுபட்டபோது மயங்கி கீழே விழுந்தார். பின்னர், அரை மணி நேரத்தில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கார்வார் போலீசார் தெரிவித்தனர்.

பாராமவுண்டிங் சாகச விளையாட்டில் ஒரு சீட்டுடன் கூடிய மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். வீரரின் இருக்கைக்குப் பின்னால் உள்ள மோட்டார் உந்தித்தள்ள அது மேலே செல்லும். கடந்த வெள்ளியன்று 55 வயதான மதுசூதன் ரெட்டி கார்வாரில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் கடற்கரைக்குச் சென்றார்.

கொரோனா காரணமாக தடை செய்யப்பட்டிருந்த பாராமவுண்டிங், வெள்ளியன்றுதான் மீண்டும் தொடங்கப்பட்டது. அங்கு குடும்பத்தினருடன் வந்த மதுசூதன ரெட்டி, தன் நண்பருக்குச் சொந்தமான அந்த சாகசத்தில் ஈடுபட்டார். அப்போது கடலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பாராமவுண்டிங்கில் பறந்துகொண்டிருந்தபோது, மோட்டாரில் சிக்கல் ஏற்பட்டு கடலில் விழுந்தார்.

உடனடியாக மீனவர்களால் மீட்கப்பட்டபோது கடற்படை கேப்டன் உயிருடன் இருந்துள்ளார். ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமான நிலையில், மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். அவரது உயிரிழப்புக்கு கடல்நீர் மற்றும் வெளியில் காணப்பட்ட வேறுபட்ட வெப்பநிலையே காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com