பஞ்சாப் காங். தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ரோஜ் சிங் சித்து

பஞ்சாப் காங். தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ரோஜ் சிங் சித்து

பஞ்சாப் காங். தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ரோஜ் சிங் சித்து
Published on

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நவ்ஜோத் சிங் சித்து அறிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிகளுக்குள் ஏகத்துக்கும் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. அங்குள்ள காங்கிரஸ் கட்சிக்குள் பல முரண்பாடுகள் நிலவி வருகின்றனர். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து கொடுத்து வந்த நெருக்கடி காரணமாக அண்மையில் மாநில முதல்வராக இருந்த அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இருவருக்குமிடையிலான மோதல் போக்கு வெடித்ததையடுத்து, கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. முதல்வர் பதவியில் இருந்து அமரிந்தர் சிங் விலகிய நிலையில், சித்துவும் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் சித்து. இதற்கான காரணங்கள் குறித்து விரைவில் சித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com