கொடியேற்றத்துடன் தொடங்கியது திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவ விழா

கொடியேற்றத்துடன் தொடங்கியது திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவ விழா
கொடியேற்றத்துடன் தொடங்கியது திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவ விழா

உலக பிரசித்திபெற்ற திருப்பதியில் இன்று கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழா தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோயிலின் உள்ளே ஏகாந்தமாக நடைபெற்ற இந்த பிரமோற்சவ விழா, வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக 11-ஆம் தேதி கருட சேவை நடைபெற உள்ளது.

கொடியேற்றத்தில் மஞ்சள் நிற கருட கொடி ஏற்றப்பட்டது. பின் சக்கரத்தாழ்வார், சேனைமுதல்வர் ஆகியோர் ஊர்வலம் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோயிலுக்கு உள்ளேயே நடத்தப்பட்டது.தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க தேவஸ்தான அர்ச்சகர்கள் கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியை ஏற்றி வைத்தனர். பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன தேவையான கருட வாகன சேவை வரும் 11-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. 15-ஆம் தேதி இரவு நடைபெறும் கொடி இறக்கத்துடன் பிரமோற்சவம் நிறைவடையும். அதுவரை தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பிரமோற்சவ விழாவும் கோயிலின் உள்ளேயே ஏகாந்தமாக நடைபெற்றது. இந்த ஆண்டும் தொற்று காரணமாக கோயிலின் உள்ளே கல்யாண உற்சவ மண்டபத்தில் நாள்தோறும் பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. அதில் முதல் நாளான இன்று, இரவு 7 மணியளவில் பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் மலையப்ப சாமி ஏகாந்தமாக அருள் பாலிக்கிறார். 11-ஆம் தேதி கருட வாகனத்தில் சாமி காட்சி தரும் விழாவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சாத்துவுள்ளார். மேலும், தேவஸ்தான வளர்ச்சி பணிகளையும் அவர் அன்றையதினம் தொடங்கி வைக்க உள்ளார். 15-ஆம் தேதி மாலையில் சக்கர ஸ்நானத்துடன் பிரமோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com