13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிற் சங்கத்தினர் வேலை நிறுத்தம்

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிற் சங்கத்தினர் வேலை நிறுத்தம்
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிற் சங்கத்தினர் வேலை நிறுத்தம்

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற் சங்கத்தினர் இன்று நாடு தழுவிய போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சுமார் 25 கோடி பேர் பங்கேற்பர் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில் போக்குவரத்து சேவைகள், வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு, தொழிலாளர் விரோதப் போக்கு, தேசநலனுக்கு எதிரான கொள்கைகளுக்கு எதிர்ப்பு, தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை 21 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த நாடு தழுவிய ஒரு நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.

User

சிஐடியு, தொமுச, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எம்எல்எஃப், விசிக தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட 10 தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபடவுள்ளனர். தமிழகத்தில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் மத்திய அரசு ஊழியர்கள் ஒன்றரை லட்சம் பேருக்கு ஆதரவாக மாநில அரசு ஊழியர்கள் ‌9 லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவான வரித்துறை, தபால்துறை, ஆசிரியர்கள் என பல்வேறு‌ துறையினர் பெருவாரியாக பங்கேற்பர் என தொழிற்சங்கத்தினர் கூறி உள்ளனர்.

தமிழகத்தில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர். மேலும், ஆட்டோ ஓட்டுநர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதால் சென்னையில் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

User

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் ம‌யமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர். பொதுமக்க‌ள், இன்று மதியம் 12 மணி முதல் பத்து நிமிடங்களுக்கு வாகனங்களை இயக்குவதை நிறுத்தி தங்களது கோரிக்கைக்கு ஆதரவு நல்கிடுமாறு தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் இன்று மருத்துவ விடுப்பு தவிர எந்த விடுமுறையும் எடுக்கக்கூடாது என தலைமை செயலாளர் சண்முகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com