\
உத்தரப்பிரதேச தேர்தல்: சமாஜ்வாதி கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி

உத்தரப்பிரதேச தேர்தல்: சமாஜ்வாதி கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி

உத்தரப்பிரதேச தேர்தல்: சமாஜ்வாதி கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி
Published on

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இத்தகவலை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் மேலும் 13 பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைய உள்ளதாகவும் சரத் பவார் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து கோவாவிலும் வலுவான அணி அமைக்க முயற்சி செய்து வருவதாகவும் பவார் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் காங்கிரசும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம் பெற்றுள்ள நிலையில் உத்தரப்பிரதேசத்தில் எதிரெதிர் அணியில் இவை களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே உத்தரப்பிரதேசத்தில் அமைச்சர் சுவாமி பிரசாத் மவுர்யா பதவி விலகியுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து அக்கட்சி உயர் மட்டக்குழு விவாதித்துள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com