வாட்டும் வறுமை... மதுபானம் விற்றுப் பிழைக்கும் தேசிய கராத்தே சாம்பியன்!

வாட்டும் வறுமை... மதுபானம் விற்றுப் பிழைக்கும் தேசிய கராத்தே சாம்பியன்!

வாட்டும் வறுமை... மதுபானம் விற்றுப் பிழைக்கும் தேசிய கராத்தே சாம்பியன்!
Published on

வறுமைத் தறியில் வாழ்க்கையை நெய்துகொண்டிருக்கிறார் ஜார்க்கண்ட மாநிலம், ராஞ்சியைச் சேர்ந்த பிம்லா முன்டா, தேசிய கராத்தே சாம்பியன். 34 வது தேசிய போட்டியில் வென்ற வெள்ளியையும் சேர்த்து டஜன் கணக்கில் பரிசுகளை வாங்கிக்குவித்த அந்த வீராங்கனை, உள்ளூரில் தயாராகும் ஹாண்டியா என்ற அரசிக் கள்ளை விற்று பிழைப்பை நடத்திவருகிறார்.

"என் குடும்பத்தின் வறுமையான பொருளாதார நிலை காரணமாக, ஊரடங்கு நாட்களில் இந்தத் தொழிலைத் தொடங்க வேண்டியிருந்தது. குடும்பத்துச் செலவையும் சமாளித்துக்கொண்டு, கராத்தே பயிற்சியையும் செய்யவேண்டியிருந்தது" என்கிறார் 26 வயதான முன்டா.

முன்டாவின் தாய் தினக்கூலித் தொழிலாளி. ஆனால் முதுமை காரணமாகவும் மோசமான உடல்நிலையாலும் அவரால் வேலைக்குச் செல்லமுடியவில்லை. பட்டதாரியான முன்டா, ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து கராத்தே கற்றுவருகிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் கராத்தே போட்டியில் கலந்துகொண்டார். மாவட்ட அளவிலான போட்டியில் முதன்முறையாக பரிசு வென்றார்.

"கராத்தேயில் மட்டும் நாம்தான் எல்லாவற்றுக்கும் செலவு செய்யவேண்டும். ஒவ்வொரு போட்டிக்குச் செல்வதற்கும் பயணத்திற்கு நிறைய பணம் தேவைப்படும்" என்று கூறும் கராத்தே வீராங்கனை முன்டா, அவர் பெற்ற பரிசுகளை வைப்பதற்குக்கூட வீட்டில் இடமில்லை. பல மெடல்கள் உடைந்துபோய் சிதைந்து காணப்படுகின்றன.

ஏதாவது ஸ்காலர்ஷிப் அல்லது வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு எதுவுமே நடக்கவில்லை. வேறு வழியே தெரியாமல், உள்ளூர் மதுபானத்தை விற்கும் முடிவுக்கு வந்தார் பிம்லா முன்டா. தன் தாயுடன் இணைந்து ஹாண்டியா மதுபானத்தை விற்று குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார் இந்த தேசிய சாம்பியன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com