நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுலை விசாரிக்க வருமான வரித்துறைக்கு அனுமதி
நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை யங் இந்தியன் என்ற நிறுவனத்தின் மூலம் முறைகேடாக கையகப்படுத்தியதாக சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் முக்கிய பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் நிறுவன சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வருமானவரித்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் முரளிதர் மற்றும் சந்தர் ஷேகர் ஆகியோர் கொண்ட அமர்வு, விசாரணையில் இருந்து விலக்கு அளிக்க கோரிய யங்க் இந்தியாவின் மனுவை தள்ளிபடி செய்தனர். யங் இந்தியா நிறுவனத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு 76 சதவீத பங்குகள் வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் ஆஜராக இருவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு நீதிமன்றம் விலக்கு அளித்தது.
ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தொடங்கப்பட்டது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. பத்திரிக்கையின் நஷ்டத்தை சரிகட்ட நிர்வாகம் கடன் வாங்கியது. இந்த கடனை அடைக்க முடியாமல் பத்திரிகை நிற்வாகம் இருந்தபோது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத்தலைவர் ராகுல் காந்தியும் கட்சி பணத்தில் கடனை அடைத்தனர்.