சிறந்த நடிகைக்கான விருதை பெற்ற கீர்த்தி சுரேஷ் - எழுந்து நின்று கைதட்டிய தாய்

சிறந்த நடிகைக்கான விருதை பெற்ற கீர்த்தி சுரேஷ் - எழுந்து நின்று கைதட்டிய தாய்

சிறந்த நடிகைக்கான விருதை பெற்ற கீர்த்தி சுரேஷ் - எழுந்து நின்று கைதட்டிய தாய்
Published on


டெல்லியில் நடைபெற்ற தேசிய திரை‌ப்பட விழாவில், நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் 66 ஆவது தேசிய தி‌ரைப்பட விருதுகளை குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு வழங்கினார். அதில் சிறந்த நடிகருக்கான விருதை ‘உரி’ திரைப்படத்திற்காக விருது ‘அந்தாதுன்’ திரைப்படத்தில் நடித்த அயுஷ்மான் குரானாவும் ‘உரி’ திரைப்படத்திற்காக விக்கி கவுஷலும் பகிர்ந்து கொண்டனர். மறைந்த நடிகை‌ ‘சாவித்திரி’யின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தெலுங்கில் தயாரிக்கப்பட்‌ட ‘மகாநடி’ படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.

சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருது பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய 'பாரம்' என்ற திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. மனைவியை இழந்த ‌இரவு‌க் காவலாளியின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.

சிறந்த ஒப்பனைக்கான விருது ‘மகாநடி’ படத்துக்காக ராஜ்ஸ்ரீ பட்னாயக், வருண் ஷா, அர்ச்சனா ராவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த சண்டைக்‌ காட்சிகளுக்கான விருதை ‘கேஜிஎஃப்’ படத்தில் பணிபுரிந்த அன்பறிவ் பெற்றார். இந்தி திரைப்படம் பதாயி ஹோவில் நடித்த சுரேகா சிக்ரிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. சக்கர நாற்காலியில் வந்த அவரை, அரங்கில் திரண்டிருந்தவர்கள் எழுந்து நின்று வரவேற்று கரவொலி எழுப்பினர்.

சிறந்த இசை அமைப்பாளருக்கா‌ன விருது ‘பத்மாவத்’ திரைப்படத்துக்கு இசையமைத்த சஞ்சய்லீலா பன்சாலிக்கு வழங்கப்பட்டது. சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கான விருது அக்ஷய் குமார் நடித்த ‘பேட்மேன்’படத்துக்கு வழங்கப்பட்டது. தாதாசாகிப் பால்கே விருது பெறுவதாக இருந்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் காய்ச்சல் காரணமாக விருது விழாவில் பங்கேற்கவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com