தேசிய சினிமா தினம் எதிரொலி: செப். 6 அன்று மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அதிரடி விலை குறைப்பு

தேசிய சினிமா தினம் எதிரொலி: செப். 6 அன்று மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அதிரடி விலை குறைப்பு
தேசிய சினிமா தினம் எதிரொலி: செப். 6 அன்று மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அதிரடி விலை குறைப்பு

தேசிய சினிமா தினத்தை கொண்டாடும் விதமாக மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விலை ஒரு நாள் மட்டும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மல்டிப்ளக்ஸ் அஷோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் 16 ஆம் தேதி தேசிய சினிமா தினத்தையொட்டி அன்று ஒரு நாள் மட்டும் நாடு முழுவதும் உள்ள 4 ஆயிரம் திரையரங்குகளில் 75 ரூபாயாக டிக்கெட் விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த விலைக் குறைப்பு PVR, INOX, CINEPOLIS, CARNIVAL உள்ளிட்ட திரையரங்க குழுமங்களுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண குறைப்பு குறித்து திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியனிடம் கேட்டபோது, தென்னிந்தியாவில் இது சாத்தியமில்லை எனக் கூறியுள்ளார். 15 ஆம் தேதி சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகவுள்ள நிலையில், டிக்கெட் கட்டணத்தை குறைத்தால், தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் எனக்கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com