நடிகர் நஸ்ருதின் ஷாவுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு: இலக்கிய நிகழ்ச்சி ரத்து!

நடிகர் நஸ்ருதின் ஷாவுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு: இலக்கிய நிகழ்ச்சி ரத்து!
நடிகர் நஸ்ருதின் ஷாவுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு: இலக்கிய நிகழ்ச்சி ரத்து!

இந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் காரணமாக, தான் கலந்து கொள்ள இலக்கிய நிகழ்ச்சியில் இருந்து பிரபல இந்தி நடிகர் நஸ்ருதின் ஷா வெளியேற்றப்பட்டார்.

பிரபல இந்தி நடிகர் நஸ்ருதின் ஷா. நடிப்புக்காக தேசிய விருதை பெற்றுள்ள இவர், மத்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் பெற்றுள்ளார். அவ்வப்போது பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு வரும் நஸ்ருதின், சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி நடந்து கொண்ட செயல் பற்றி கடுமையாகச் சாடியிருந்தார். ’கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல, மோசமான நடத்தை கொண்டவரும்தான்’ என்று கூறியிருந்தார். இதற்கும் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் நடந்த கலவரத்தில் போலீஸ் அதிகாரியும் இளைஞரும் கொல்லப்பட்ட விவகாரம் பற்றி, ‘’போலீஸ் அதிகாரியின் கொலையை விட பசுக்களின் இறப்பு அதி முக்கியமாகப் பேசப்படுகிறது’’ என்று கிண்டலாகக் கூறி யிருந்தார். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இலக்கிய விழாவை தொடக்கி வைப்பதற்காக தனது மனைவியுட ன் நேற்று அங்கு சென்றார். 

இதையறிந்த பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. தனது கருத்துக்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தன. பின்னர் விழா நடந்த இடத்தில் அவருக்கு எதிரான கோஷங்களையும் எழுப் பிய அவர்கள், நஸ்ருதீன் ஷா புகைப்படம் இடம்பெற்றிருந்த போஸ்டரை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஷாவை, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டாம் என்று தடுத் துவிட்டனர்.

இதுபற்றி இந்த இலக்கிய விழாவின் ஒருங்கிணைப்பாளர் ராஸ் பிஹாரி கவுர் கூறும்போது, ’வலதுசாரி அமைப்புகள், விழா தொடங்குவதற்கு முன் அரங்கத்துக்குள் நுழைய முற்பட்டனர். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தோம். இந்த போரா ட்டம் காரணமாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ஷாவை விழாவுக்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொண் டோம். இதனால் அவர் வராமலேயே விழாவைத் தொடங்கிவிட்டோம்’’ என்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நஸ்ருதீன் ஷா, ‘’இதற்கு முன்பும் இதே கருத்தை நான் தெரிவித்திருக்கிறேன். ஆனா ல், இப்போது மட்டும் நான் துரோகி என்று முத்திரைக் குத்தப்பட்டி ருப்பது ஏன் என்று தெரியவில்லை. இது விசித்திரமாக இருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார். 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com