\
ரயில் தண்டவாளத்தின் நடுவே படுத்த பெண் - வைரலான வீடியோ

ரயில் தண்டவாளத்தின் நடுவே படுத்த பெண் - வைரலான வீடியோ

ரயில் தண்டவாளத்தின் நடுவே படுத்த பெண் - வைரலான வீடியோ
Published on

கர்நாடகாவில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் வந்ததால் சாதுர்யமாக செயல்பட்டு பெண் ஒருவர் உயிர்த்தப்பினார். 

கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் ரயில் நிலைய மேடையில் இருந்து கீழே இறங்கிய பெண் ஒருவர், ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது தன்னை நெருங்கி வந்த ரயிலைக் கண்டு அந்தப்பெண் அதிர்ச்சி அடைந்தனர். இதனை நடைமேடையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த பயணிகள் அந்தப்பெண்ணை நோக்கி குரல் எழுப்பினர். உடனடியாக தண்டவாளத்தின் நடுவே படுக்கும்படி கூறினர். 

இதனைக் கவனித்த அந்தப்பெண் உடனே ரயில் தண்டவாளத்தின் நடுவில் படுத்துக்கொண்டார். ரயில் சென்றதும் எவ்வித காயமும் இன்றி அந்தப்பெண் வெளியே வந்தார். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோ:

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com