”நரேந்திர தாமோதரதாஸ் மோடி எனும் நான்..” - தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார் மோடி!

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பதவியேற்றார் பிரதமர் மோடி
பதவியேற்றார் பிரதமர் மோடிpt web

தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அவரது பதவியேற்பு விழாவையொட்டி டெல்லி மாநகரே விழாக்கோலம் பூண்டுள்ளது. பதவியேற்பு விழாவினை ஒட்டி கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு நாடுகளின் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி
இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பிரதமர் பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி கலந்துகொண்டார். அதேபோல், தனது குடும்பத்துடன் கலந்து கொண்ட முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். INDIA கூட்டணியின் தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவும் விழாவில் கலந்துகொண்டார்.

நிகழ்வில் நரேந்திர மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல் என பாஜக தலைவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அதேபோல் கூட்டணி கட்சிகளைச் சார்ந்த ஹெச் டி குமாரசாமி போன்றவர்களும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.. மனோகர் லால் கட்டார் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான இவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com