உ.பி.யில் தொங்கு சட்டப்பேரவை: மோடி அச்சம்

உ.பி.யில் தொங்கு சட்டப்பேரவை: மோடி அச்சம்
உ.பி.யில் தொங்கு சட்டப்பேரவை: மோடி அச்சம்

உத்தரப்பிரதேச தேர்தலில் தங்களது தோல்வி உறுதியாகிவிட்டதைக் கணித்துக் கொண்ட சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் ஆட்சிக்கு வர புதிய திட்டத்தை வகுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் தேர்தலில் ஐந்து கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் சமாஜ்வாதி -காங்கிரஸ் கட்சி கூட்டணி, பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

மவ் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதை சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் உணர்ந்து கொண்டன. இதனால் அவர்கள் புதிய திட்டத்தை வகுத்து வருகிறார்கள். தேர்தலில் தோற்றாலோ அல்லது தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தாலோ, யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு சட்டப்பேரவை அமையும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அந்த சூழலில் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என்று அந்த கட்சிகள் திட்டமிடுகின்றன என்று அவர் பேசினார். சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் அவ்வாறு எண்ணினால், அடுத்துவரும் மக்களவை தேர்தலில் பாஜகவை வெற்றிபெறச் செய்து மக்கள் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்துவர் என்றும் பிரதமர் மோடி பேசினார். பாஜவை வீழ்த்த அந்த கட்சிகள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அதுகுறித்து கவலைப்படப் போவதில்லை. ஆனால், உத்தரப்பிரதேசத்தின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம் என்று அவர்களைக் கேட்டுக்கொள்வதாக பிரதமர் மோடி பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com