இந்தியா
காஷ்மீர் சுயாட்சி விவகாரம்: காங்கிரஸ் தலைவர்கள் மீது மோடி குற்றச்சாட்டு
காஷ்மீர் சுயாட்சி விவகாரம்: காங்கிரஸ் தலைவர்கள் மீது மோடி குற்றச்சாட்டு
காஷ்மீருக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் பேசுவது, நமது ராணுவ வீரர்களை அவமதிக்கும் செயலாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்தை ஒழிக்க நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்டிரைக் மற்றும் வீரர்களின் தியாகத்தை காங்கிரஸ் எப்படி கருதுகிறது என்பதை அக்கட்சியின் ஒரு தலைவரது பேச்சு உணர்த்திவிட்டது. காஷ்மீருக்கு சுயாட்சி அளித்து விடலாம் என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருந்த நிலையில், பிரதமர் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பிரதமரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ப.சிதம்பரம், தனது பதிலை பிரதமர் முழுமையாக படிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

