ஆப்கன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாடு என்ன? - இன்று பிரதமர் முக்கிய ஆலோசனை

ஆப்கன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாடு என்ன? - இன்று பிரதமர் முக்கிய ஆலோசனை
ஆப்கன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாடு என்ன? - இன்று பிரதமர் முக்கிய ஆலோசனை

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு இன்று முக்கிய ஆரோசனை மேற்கொள்கிறது.

தலைநகர் டெல்லியில் நேற்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை நடத்தியது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிலைமையை பொறுத்து அடுத்த கட்ட ஆலோசனை இன்று நடைபெறும் என தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம், ஆப்கான் நிகழ்வுகள், அது இந்தியாவில் ஏற்படுத்தும் தாக்கங்கள் இந்தியர்களின் நிலை குறித்து விரிவாக நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

இதனை தனது அமைச்சரவை சகாக்களான நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ஆப்கான் விவகாரத்தில் இந்த 4 துறைகள் முக்கிய பங்காற்றுகின்றன.

அஜித் தோவலிடம், மத்திய உளவுத்துறை கொடுத்த தகவல்களை திரட்டி அடுத்தடுத்து என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. ஆப்கன் விவகாரத்தை பொறுத்தவரை ஒரே கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் பிரச்னை அல்ல. உலக நாடுகள் எதிர்த்த தலிபான்கள் தலைமையில் ஒரு ஆட்சி அமைந்துள்ளது. அதனை ஆதரிப்பதா? வேண்டாமா? என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட வேண்டும். மற்றொரு காரணம், நமக்கு வர்த்தக ரீதியிலும், கொள்கை ரீதியிலும் எதிரணியில் இருக்கும் பாகிஸ்தான், சீனா ஆதரிக்கும் தலிபான் அரசை இந்தியா எந்த வகையில் ஏற்றுக்கொள்ளும் என்பது தொடர்பாக ஆழமான விவாதங்கள் நடைபெற உள்ளது.

ஆப்கனில் உள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட உள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை 1500க்கும் மேற்பட்டவர்களை அவர்கள் மீட்டிருக்கிறார்கள். இதில் இந்தியர்கள் யாரேனும் ஏறி சென்றிருக்கிறார்களா? என்பது ஆராயப்படவேண்டியது அவசியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com