வாரணாசி கங்கையில் பிரதமர் மோடி புனித நீராடி வழிபாடு

வாரணாசி கங்கையில் பிரதமர் மோடி புனித நீராடி வழிபாடு
வாரணாசி கங்கையில் பிரதமர் மோடி புனித நீராடி வழிபாடு

உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியில் உள்ள கங்கையாற்றில் பிரதமர் மோடி புனித நீராடினார்.

இரண்டு நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றடைந்தார். அவரை அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, அங்கிருக்கும் கால பைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி பிரதமர் மோடி, அங்கிருந்து இரண்டடுக்கு படகில் பயணம் மேற்கொண்டார்.

தொடர்ச்சியாக தற்போது, உலகப்புகழ்பெற்ற காசி விஸ்வநாதன் ஆலயத்திற்கு வருகை தந்த மோடி, புன்னிய நதியான காசி நதியில் புனித நீராடி வழிபாடு நடத்தினார். தொடர்ந்து காசி விஸ்வாநாதர் கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளை நடத்த உள்ளார். இதில் உத்தரப் பிரதேச மாநில முதலைமச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொள்ள உள்ளார். 339 கோடி மதிப்பில் புதிதாக புனரமைக்கபட்டுள்ள காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com