nara lokeshputhiya thalaimurai
இந்தியா
“எனது தந்தை சந்திரபாபுவை சிறையில் வைத்து கொல்ல முயற்சி” - நாரா லோகேஷ் புகார்!
தனது தந்தை சந்திரபாபு நாயுடுவை சிறையிலேயே வைத்து கொன்று விட முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திட்டம் தீட்டியிருப்பதாக நாரா லோகேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது மகன் நாரா லோகேஷ் எக்ஸ் சமூக தளத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். தனது தந்தைக்கு பிணைதராமல் சிறைக்குள்ளேயே வைத்துக் கொன்று விட முதலமைச்சர் ஜெகன்மோகன் திட்டம் தீட்டியுள்ளதாக அதில் லோகேஷ் குறிப்பிட்டுள்ளார்.
chandrababu naidupt desk
சிறைக்குள் சந்திரபாபுவுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ள லோகேஷ், அண்மையில் சிறையில் டெங்குவால் ஒரு கைதி இறந்ததை சுட்டிக் காட்டியதோடு, அதே போன்ற நிலையை தனது தந்தைக்கும் ஏற்படுத்த ஜெகன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தனது தந்தைக்கு சிறையில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு முதலமைச்சரே பொறுப்பு என்றும் நாராலோகேஷ் பதிவிட்டுள்ளார்.