”ராக்கெட்ரியில் பொய்களால் இஸ்ரோவை இழிவுப்படுத்தி இருக்கிறார் நம்பி” - முன்னாள் விஞ்ஞானிகள்

”ராக்கெட்ரியில் பொய்களால் இஸ்ரோவை இழிவுப்படுத்தி இருக்கிறார் நம்பி” - முன்னாள் விஞ்ஞானிகள்
”ராக்கெட்ரியில் பொய்களால் இஸ்ரோவை இழிவுப்படுத்தி இருக்கிறார் நம்பி” - முன்னாள் விஞ்ஞானிகள்

ஆர்.மாதவன் இயக்கத்தில் வெளியான ‘ராக்கெட்ரி’ படத்தில் நம்பி நாராயணன் பற்றிய பொய்கள் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவை இழிவுப்படுத்துவதாக அந்நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் ஆர் மாதவன் எழுதி, தயாரித்து, இயக்கிய “ராக்கெட்ரி” திரைப்படம் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணானின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. திரைப்படத்தில் நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தை ஆர்.மாதவன் தான் ஏற்று நடித்து இருந்தார். இன்சாட் ராக்கெட் இஞ்சின் உருவாக்கத்தில் முக்கியப்பங்கு வகித்ததில் இருந்தது கேரள உளவுத்துறை அதிகாரிகளால் சித்ரவதைக்கு ஆளானது வரை படத்தில் பல வரலாற்று நிகழ்வுகள் சொல்லப்பட்டிருக்கும்.

இந்நிலையில் மாதவனின் ராக்கெட்ரி படம் தொடர்பாக பேட்டியளித்த இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானிகள், “ஆர் மாதவனின் ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட் நம்பி நாராயணனைப் பற்றிய பொய்களால் இஸ்ரோவை இழிவுபடுத்துகிறது. இப்படத்தில் குறிப்பிட்டுள்ள 90 சதவீத விஷயங்கள் உண்மையே அல்ல.” என்று தெரிவித்தனர்.

சில தினங்களுக்கு முன்பு இஸ்ரோ எல்.பி.எஸ்.இ., இயக்குநர் டாக்டர் ஏ.இ.முத்துநாயகம், கிரையோஜெனிக் என்ஜின் திட்ட இயக்குநர் - பேராசிரியர் இ.வி.எஸ்.நம்பூதிரி, கிரையோஜெனிக் என்ஜின் துணை இயக்குனர் D. சசிகுமாரன் மற்றும் இதர முன்னாள் ISRO விஞ்ஞானிகள் செய்தியாளர்களை சந்தித்தபோது படத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்யக் கோரினார்.

“நம்பி நாராயணன் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் மூலமாகவும், தொலைக்காட்சி சேனல்கள் மூலமாகவும் இஸ்ரோ மற்றும் பிற விஞ்ஞானிகளை அவதூறாகப் பேசியதால் சில விஷயங்களைப் பொதுமக்களிடம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பல திட்டங்களின் தந்தை என்று அவர் கூறுவது தவறானது. இந்தியக் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற ஏ.பி.ஜே. அப்துல் கலாமைத் தான் ஒருமுறை திருத்தியதாகத் திரைப்படத்தில் கூறியிருக்கிறார். அதுவும் பொய்" என்று முன்னாள் விஞ்ஞானிகள் கூறினர்.

இஸ்ரோவின் தற்போதைய தலைவரான எஸ். சோமநாத்திடம், படத்தில் கூறப்பட்டுள்ள தவறான கூற்றுகள் குறித்து தீர்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டோம். கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை இந்தியா கையகப்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தியதால் தான் காவலில் வைக்கப்பட்டதாக படத்தில் நாராயணன் கூறியதை மறுக்கிறோம். இஸ்ரோ 1980களில் ஈ வி எஸ் நம்பூதிரியின் வழிகாட்டுதலின் கீழ் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் பணி” என்றும் முன்னாள் விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது.

"சில தொலைக்காட்சிகளில் நாராயணன் திரைப்படத்தில் கூறப்பட்டவை அனைத்தும் உண்மை என்று கூறியதையும் நாங்கள் அறிந்தோம். சில விஞ்ஞானிகள் நாராயணன் அவர்களின் பல சாதனைகளுக்கு பெருமை சேர்த்ததாகக் கூட கவலை தெரிவித்தனர்" என்று அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com