இந்தியா
முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றார் ஆந்திர முதல்வர்
முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றார் ஆந்திர முதல்வர்
ஆந்திராவுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் திட்டத்துடன் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகளுக்கு ஒன்பது நாள் அரசு முறை பயணமாக புறப்பட்டுச் சென்றுள்ளார்.
முதல் கட்டமாக அமெரிக்காவின் சிகாகோ சென்றடைந்துள்ள அவர், ஆந்திர தலைநகர் அமராவதியில் உலகத் தரம் வாய்ந்த கட்டடங்களை எழுப்புவது தொடர்பான தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளவும், அதன் வடிவங்களை இறுதி செய்யும் பணியிலும் ஈடுபடுகிறார். மேலும் மாநிலத்தின் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக 350 வேளாண் விஞ்ஞானிகள், பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேசுகிறார்.