\
மாட்டிறைச்சிக் கொண்டு செல்வதாக தாக்குதல்: 4 பேர் கைது

மாட்டிறைச்சிக் கொண்டு செல்வதாக தாக்குதல்: 4 பேர் கைது

மாட்டிறைச்சிக் கொண்டு செல்வதாக தாக்குதல்: 4 பேர் கைது
Published on: 

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக கூறி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள பார்சிங்கி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சலீம் இஸ்மாயில் ஷா என்பவர் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த சிலர், மாட்டிறைச்சி கொண்டு செல்வதாகக் கூறி  சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட மொரேஷ்வர் தெண்டுல்கர், அஸ்வின், ஜனார்த்தன் சௌத்ரி, மற்றும் ராமேஸ்வர் ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com