மனநலம் பாதிக்கப்பட்ட தாய் : பசியால் உயிரிழந்த 3 குழந்தைகள் !

மனநலம் பாதிக்கப்பட்ட தாய் : பசியால் உயிரிழந்த 3 குழந்தைகள் !
மனநலம் பாதிக்கப்பட்ட தாய் : பசியால் உயிரிழந்த 3 குழந்தைகள் !

கிழக்கு டெல்லியில் மூன்று குழந்தைகள் உணவின்றி பட்டினியால் உயிர் இழந்தனர். 

கிழக்கு டெல்லியில் உள்ள மண்டாவலி பகுதியில் வசித்து வந்த 3 குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்தது. அவர்களை அங்கிருந்தவர்கள் சிலர் லால்பகதூர் சாஸ்திரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், மூன்று குழந்தைகளும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதில் கொடுமை என்னவென்றால், மூன்று குழந்தைகளும் பட்டினியால் உயிரிழந்திருப்பது பிரேத பரிசோதனியில் தெரியவந்ததுதான். இந்தச் சம்பவம் தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் தலைமையில் விசாரணை நடத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. 

யார் இந்த குழந்தைகள், இறந்தது எப்படி ?

கிழக்கு டெல்லியில் ரிக்‌ஷா ஓட்டுபவர், மங்கள். இவர் மதுபோதைக்கு அடிமையாக வாழ்ந்து வந்துள்ளார். இவரது குழந்தைள் தான் உயிரிழந்த மான்சி (8), பாரோ (6) மற்றும் சுகோ (2). இந்தக் குழந்தைகளின் தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர். வாடகை கட்ட இயலாத இந்தக் குடும்பம், சாலைக்கு ஒதுக்குப்புறமான இடம் ஒன்றில் வந்துள்ளனர். தாய்க்கு மனநிலை சரியில்லாததால், குழந்தைகளை அவரால் கவனிக்க முடியவில்லை. தந்தையோ மதுவுக்கு அடிமையாகி இருந்துள்ளார். 

இருப்பினும் தனது குழந்தைகளுக்கு ரிக்‌ஷா ஓட்டி உணவு அளித்துவந்துள்ளார். இந்நிலையில் அவரது ரிக்‌ஷா திருடுபோயுள்ளது. இதனால் மன உளைச்சலில் மேலும் குடிக்க ஆரம்பித்த மங்கள், வேலை தேடி ஒடிசா மாநிலத்துக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் ஏனோ? திரும்பவில்லை. தாயும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால், குழந்தைகளை கவனிக்க யாருமில்லை. உணவின்றி வாடி வந்த குழந்தைகள், பல நாட்கள் பசியால் அழுதே பட்டினியால் உயிரிழந்துள்ளன. 

துயரம், அவலம் :

இதன்பின்னர் தான் அந்தக் குழந்தைகளை கண்ட அப்பகுதியினர் சிலர் மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அவர்களின் மரணம் அப்பகுதியி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் குழந்தைகள் இருந்த இடத்தின், அக்கம்பக்கதினர் ஏன் உணவளிக்கவில்லை ? என பலரும் கொந்தளித்துள்ளனர். இதுதொடர்பாக மாஜிஸ்ட்ரேட் தலைமையில் டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com