இந்தியா
மைசூருவில் தசரா விழா கோலாகலம்: ஜொலித்தது அரண்மனை
மைசூருவில் தசரா விழா கோலாகலம்: ஜொலித்தது அரண்மனை
கர்நாடக மாநிலம் மைசூரு அரண்மனையில் தசரா விழா வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி முழு அரண்மனையும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது சுற்றுலா பணிகளையும், பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து 400 ஆண்டுகளாக கோலாகலமாக நடத்தப்பட்டு வரும் மைசூரு தசரா விழாவில் நேற்று ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விழாவின் முத்தாய்ப்பாக சாமுண்டேஸ்வரி அம்மன் யானைகள் புடைசூழ பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது கூடியிருந்த திரளான பக்தர்கள் அம்மனை பக்தியுடன் வழிபட்டனர்.