மைசூர்: கொட்டும் மழையில் நனைந்தபடி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி

மைசூர்: கொட்டும் மழையில் நனைந்தபடி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி
மைசூர்: கொட்டும் மழையில் நனைந்தபடி பொதுக்கூட்டத்தில் பேசிய  ராகுல் காந்தி

கொட்டும் மழையிலும் மைசூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நனைந்தபடி பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, வெறுப்பு, பிரித்தாளும் அரசியல், விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்தார்.

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி(எம்.பி), கடந்த 7ஆம் தேதி தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான பாத யாத்திரையை தொடங்கினார். தொடர்ந்து 150 நாட்கள், சுமார் 3,500 கி.மீ. தொலைவு பயணித்து, காஷ்மீரை சென்றடைகிறார்.

இந்நிலையில் இன்று காந்தி ஜெயந்தியை ஒட்டி கர்நாடகாவில் மைசூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது கனமழை பெய்யத் தொடங்கிய போதும் மழையை பொட்படுத்தாமல் நனைந்தபடி உரையை தொடர்ந்தார் ராகுல். அவரது உரையின் போது, வெறுப்பு, பிரித்தாளும் அரசியல், விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்தார்.

இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், இது ஒரு தெளிவான அறிவிப்பு. வெறுப்புக்கு எதிராக இந்தியாவை ஒன்றிணைப்பதிலிருந்தும், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகப் பேசுவதிலிருந்தும் பாரத் ஜோடோ யாத்திரையை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com