“எங்க கட்சி தொண்டர்கள் கங்கனாவிற்கு போதிய பாதுகாப்பு கொடுப்பாங்க”- ராம்தாஸ் அத்வாலே

“எங்க கட்சி தொண்டர்கள் கங்கனாவிற்கு போதிய பாதுகாப்பு கொடுப்பாங்க”- ராம்தாஸ் அத்வாலே

“எங்க கட்சி தொண்டர்கள் கங்கனாவிற்கு போதிய பாதுகாப்பு கொடுப்பாங்க”- ராம்தாஸ் அத்வாலே
Published on

என்னுடைய கட்சி நடிகை கங்கனா ரனாவத்திற்கு பாதுகாப்பு வழங்கும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.  

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண விவகாரத்தில்,  நடிகை கங்கனா ரனாவத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இது தொடர்பாக சமூகவலைதளங்களில் அவர் பதிவிடும் பதிவுகள் ஆதரவையும் எதிர்ப்பையும் சேர்த்தே பெற்று வருகின்றன. இந்நிலையில் அண்மையில் கங்கனா ரனாவத் பதிவை விமர்சனம் செய்த ஒருவரின் பதிவை மும்பை காவல் ஆணையர் பரம் பிர் சிங் லைக் செய்தார். இதை கண்டிக்கும் வகையில் அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கங்கனா, குற்றத்தைக் கண்டிக்க வேண்டிய காவல்துறையே இவ்வாறு நடந்து கொண்டுள்ளது. அப்படியானால் மும்பையில் எனது பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பினார். மேலும் ஏன் மும்பை , காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமித்ததுபோல் இருக்கிறது என்றும் சாடினார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் மும்பை காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லை என்றால் கங்கனா மும்பைக்கு வர வேண்டாம் என விமர்சித்தார். இதற்கு கங்கனா புதன்கிழமையான இன்று நான் மும்பை வருவதை முடிந்தால் தடுத்து பாருங்கள் எனக் கூறினார். இந்நிலையில் அரசு கங்கனாவுக்கு y- ப்ளஸ் பாதுகாப்பு அளிக்க முன் வந்தது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, இந்திய குடியரசு கட்சியின் தொண்டர்கள் கங்கனா ரனாவத்துக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் எனக் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசும் போது “ நடிகை கங்கனா மும்பை நகரத்தை விமர்சிக்கவில்லை. ஆனால் அரசை விமர்சித்தார். அரசாங்கத்திற்கு எதிராக அவர் முன் வைத்த விமர்சனங்களின் அடிப்படையில், இங்கு அவர் வாழும் உரிமையை எதிர்ப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது எனக் கூறியுள்ளார். மேலும் அவருக்கு பாதுகாப்பு வழங்க முன்வருவதாகவும் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com