'ஹிந்தி தெரியாது; தலைமை செயலாளரை மாற்றுங்கள்!' - அமித்ஷாவுக்கு மிசோரம் முதல்வர் கடிதம்

'ஹிந்தி தெரியாது; தலைமை செயலாளரை மாற்றுங்கள்!' - அமித்ஷாவுக்கு மிசோரம் முதல்வர் கடிதம்
'ஹிந்தி தெரியாது; தலைமை செயலாளரை மாற்றுங்கள்!' -  அமித்ஷாவுக்கு மிசோரம் முதல்வர் கடிதம்

எங்கள் மாநில அமைச்சர்களுக்கு ஹிந்தி தெரியாது. சிலருக்கு ஆங்கிலம் கூட தெரியாது. எனவே மிசோரம் மொழி தெரியாத தலைமை செயலாளரை மாற்ற வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜோரம்தங்கா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதியுள்ள கடித்தத்தில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மிசோரம் மாநில தலைமை செயலாளராக ரேணு ஷர்மாவை மத்திய அரசு நியமித்து உத்தரவிட்டது. இந்நிலையில் அவரை மாற்ற வேண்டும் என்று கோரி மிசோரம் முதலமைச்சர் ஜோரம்தங்கா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடித்தத்தில், ''தலைமை செயலாளர் லால்னுன்மாவியா சுவாகோ ஓய்வுக்கு பிறகு என்னுடைய தனிச்செயலாளர் ஜே.சி.ராம்தங்காவை நியமிக்குமாறு நான் கோரியிருந்தேன். ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் ரேணு ஷர்மாவை மிசோரம் தலைமை செயலாளராக நியமித்து உத்தரவிட்டுள்ளது. இங்கே மிசோரம் மக்களுக்கு ஹிந்தி தெரியாது.

அதேபோல என்னுடைய அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் யாருக்கும் ஹிந்தி தெரியாது. சிலருக்கு ஆங்கிலத்திலேயே பிரச்னை இருக்கிறது. அப்படியிருக்கும்போது, மிசோரம் மொழி தெரியாத ஒரு தலைமை செயலாளரின் செயல்பாடு ஆக்கப்பூர்வமாக இருக்காது. மிசோரம் மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து மாநில மொழி தெரியாத ஒரு தலைமைச் செயலாளரை இந்திய அரசு ஒருபோதும் நியமிக்கவில்லை. அது UPA அரசாக இருந்தாலும் சரி, மத்தியிலுள்ள NDA அரசாக இருந்தாலும் சரி, இது மிசோரம் மாநிலம் உருவானதில் இருந்தே நடைமுறையில் உள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களில், அந்தந்த மாநிலத்தின் அடிப்படை மொழி கூட தெரியாத தலைமைச் செயலர் பதவியேற்கப்படுவதில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை'' என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com