'மறைந்தாலும் போகாத பாசம்' - மோப்ப நாய்க்கு சிலை அமைத்த போலீசார்!

'மறைந்தாலும் போகாத பாசம்' - மோப்ப நாய்க்கு சிலை அமைத்த போலீசார்!

'மறைந்தாலும் போகாத பாசம்' - மோப்ப நாய்க்கு சிலை அமைத்த போலீசார்!
Published on

மறைந்த மோப்ப நாய்க்கு சிலை அமைத்து மரியாதை செலுத்தியுள்ளனர் முசாபர்நகர் போலீசார்

காவல்துறையில் மோப்ப நாய்களின் பங்கு அளப்பரியது. பல மர்மமான வழக்குகளை மோப்ப நாய்கள் உதவியுடன் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். வெடிகுண்டு, கொலை போன்ற பல வழக்குகளை மோப்ப நாய்கள் முடிக்க உதவியுள்ளன. அப்படி உற்ற நண்பனாக இருந்த ஒரு மோப்ப நாய்க்கு சிலை அமைத்து மரியாதை கொடுத்துள்ளனர் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் போலீசார்.

முசாபர்நகர் போலீசார் கட்டுப்பாட்டில் இருந்த டிங்கி என்ற மோப்பநாய் கிட்டத்தட்ட 49 குற்ற வழக்குகளை கண்டுபிடிக்க உதவியுள்ளது. இந்த நாய் கடந்த வருடம் இறந்தது. இந்நிலையில் ஜெர்மன் செப்பேர்ட் வகை நாயான டிங்கியின் சிலையை உருவாக்கி அதற்கு மரியாதை செலுத்தியுள்ளார் அதனை பராமரித்து வந்த சுனில்குமார். இந்த தகவல்களையும், புகைப்படத்தையும் ஐபிஎஸ் அதிகாரி அபிஷேக் யாதவ் பகிர்ந்துள்ளார். சுனில்குமாரின் அன்புக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com