\
முகநூல் தோழிகளை சந்திக்க வந்த இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்

முகநூல் தோழிகளை சந்திக்க வந்த இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்

முகநூல் தோழிகளை சந்திக்க வந்த இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்
Published on

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் முகநூல் தோழிகளை சந்திக்க வந்த இரண்டு இளைஞர்கள் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கும்பல் கைகளாலும், கால்களாலும், லெதர் பெல்ட்களைப் பயன்படுத்தியும் அந்த இளைஞர்களைத் தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் மூலம் தீவிர இந்து அமைப்பான பஜ்ரங்தள், உத்தரப் பிரதேசத்தின் தலைப்புச் செய்தியில் இடம் பிடித்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், அந்த இளைஞர்களை ஈவு இரக்கமின்றி தாக்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேலிக் கூத்தாகியுள்ளது.

நடுச்சாலையில் அந்த இளைஞர்களின் ஆடைகளை கழட்டி, தரையில் மண்டியிட வைத்து இடைவெளி விடாமல் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. ஏற்கனவே, காதலர் தினத்தன்று பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் இந்த அமைப்பினர் நிகழ்த்தியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com