\
கருகிய ரொட்டியை பரிமாறியதாக கூறி விவகாரத்து

கருகிய ரொட்டியை பரிமாறியதாக கூறி விவகாரத்து

கருகிய ரொட்டியை பரிமாறியதாக கூறி விவகாரத்து
Published on

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கருகிப்போன ரொட்டிகளை பரிமாறியதற்காக முத்தலாக் முறையில் விவாகரத்து தந்ததாக கணவர் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் மஹாபோ மாவட்டத்தின் பஹ்ரேதா கிராமத்தில் இளம்பெண் ஒருவருக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவர் மீது அப்பெண், காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் சமைக்கும்போது 3 முறை ரொட்டியை கருகவிட்டதாக கூறி தனது கணவர் முத்தலாக் கூறிவிட்டதாகவும் வீட்டை விட்டு வெளியேறுமாறு தம்மை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அப்பெண்ணின் கணவர் மீது குடும்ப வன்முறை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம்  அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com