பழங்குடி சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு -பாலியல் வன்கொடுமை செய்து கொலை?

பழங்குடி சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு -பாலியல் வன்கொடுமை செய்து கொலை?
பழங்குடி சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு -பாலியல் வன்கொடுமை செய்து கொலை?

ஜார்க்கண்டில் 14 வயது பழங்குடி சிறுமி மரத்தில் தூக்கிட்ட நிலையில் பிணமாக கிடந்த சம்பவத்தில் அர்மன் அன்சாரி என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜார்க்கண்ட்  மாநிலம் தும்கா பகுதியை சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை அன்று அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேதப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் அதே பகுதியை சேர்ந்த அர்மன் அன்சாரி என்ற நபரை கைது செய்தனர். கட்டிட தொழிலாளியான அன்சாரி திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி நேற்று முன்தினம் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அர்மன் அன்சாரியை கைது செய்தனர். பாலியல் வன்கொடுமை செய்த பின் சிறுமியை அன்வர் கொலை செய்து மரத்தில் தூக்கில் தொங்க விட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜார்க்கண்ட்  முதல்வர் முதல்வர் ஹேமந்த் சோரன் கூறுகையில், ''தும்காவில் நடந்த சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு உள்ளார். சிறுமியின் குடும்பத்தினருக்கான நீதியை உறுதி செய்யும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு தும்கா காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இறந்த மகளுக்கு கடவுள் அமைதி கொடுக்கட்டும், அந்த குடும்பத்திற்கு வலிமை அளிக்கட்டும்'' என்று கூறியுள்ளார்.

சிறுமியின் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில பாஜக தலைவர் லூயிஸ் மராண்டி, ''இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இல்லையெனில், விசாரணையை சிபிஐ அல்லது என்ஐஏவிடம் ஒப்படைக்க வேண்டும். சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்காவிட்டால் கிராமம் கிராமமாக சென்று மகளிர் அமைப்பினை உருவாக்குவோம்” என்று கூறினார்

இதையும் படிக்க: ”என் புள்ளையவிட நல்லா படிக்குறான்” -பொறாமையில் சிறுவனுக்கு விஷம் கொடுத்த சக மாணவியின் தாய்




Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com