ஜெய் ஸ்ரீராம் கூறக்கோரி சரமாரியாக தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞர் !

ஜெய் ஸ்ரீராம் கூறக்கோரி சரமாரியாக தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞர் !

ஜெய் ஸ்ரீராம் கூறக்கோரி சரமாரியாக தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞர் !
Published on

ஊருக்குள் திருட வந்ததாக இளைஞரை ஊர் மக்கள் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளைஞரை பலர் தாக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஜார்கண்ட் மாநிலம் ஹர்ஷவான் மாவட்டத்தில் டேப்ரெஷ் அன்சாரி என்ற 24 வயது இளைஞரை அப்பகுதி மக்கள் கடந்த 18ம் தேதி சரமாரியாக தாக்கினர். ஊருக்குள் திருட வந்ததாகக் கூறி பின்னர் போலீசாரிடம் அன்சாரி ஒப்படைக்கப்பட்டார். பொதுமக்களின் தாக்குதலால் பலத்த காயமடைந்த அன்சாரியை போலீசார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பொதுமக்களின் புகாரும் ஏற்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. ஆனால் கடந்த 22ம் தேதி அன்சாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்நிலையில் அன்சாரி தாக்கப்படும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின. அதில் ஒரு வீடியோவில் அன்சாரியை ''ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான்'' கூறக்கோரி வற்புறுத்தி சிலர் தாக்குகின்றனர். இதனையும் ஆதாரமாக எடுத்துக்கொண்ட போலீசார் அன்சாரி இறப்பு தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்த போலீசார், அன்சாரியும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் திருடுவதற்காக ஊருக்குள் சென்றுள்ளனர். அன்சாரியின் நண்பர்கள் தப்பித்துவிட அவரை  மட்டும் ஊர் மக்கள் பிடித்து தாக்கியுள்ளனர். புனேவில் வேலை பார்த்து வந்த அன்சாரி, ரம்ஜானுக்காக ஊருக்கு வந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக கும்பல் தாக்குதலில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மத பிரிவினை பார்க்கப்பட்டு கும்பல் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. 

இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை என்ற சமீபத்தில் அமெரிக்கா அறிக்கை விடுத்தது. அதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அன்சாரி இறப்பு மாதிரியான கும்பல் தாக்குதல் கொலைகள் இந்தியாவில் மத சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்புவதாக சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com