பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மேல்முறையீடா?

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மேல்முறையீடா?
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மேல்முறையீடா?

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வதா? கூடாதா? என்பது குறித்து இஸ்லாமிய அமைப்புகள் ‌ஒருசேர முடிவெடுக்க வேண்டும் என அகில இந்திய இஸ்லாமிய தனிச் சட்ட வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய இஸ்லாமிய தனிச் சட்ட வாரியத்தின் மூத்த உறுப்பினர் மவுலானா காலித் ரஷீத் ஃபிராங்கி, சிபிஐ சிற‌ப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனக் கூறினார். பாபர் மசூதி எப்படி இடிக்கப்பட்டது என்பதை ஒட்டுமொத்த நாடே அறியும் என கூறிய அவர், குற்றவாளியா? நிரபராதியா? என முடிவு எடுக்க வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கு தான் இருக்கிறது‌ என தெரிவித்தார்.

பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்யலாமா அவ்வாறு செய்தால் ஏதேனும் பலன் கிடைக்குமா என்பதை ஒட்டுமொத்த இஸ்லாமிய அமைப்புகளும் ஒரு சேர அமர்ந்து பேசி முடிவு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பை இஸ்லாமியர்கள் எப்போதும் மதிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com