இந்தி இசையமைப்பாளர் கயாம் காலமானார்

இந்தி இசையமைப்பாளர் கயாம் காலமானார்

இந்தி இசையமைப்பாளர் கயாம் காலமானார்

இந்தி படவுலகின் முதுபெரும் இசையமைப்பாளரான கயாம் என அழைக்கப்பட்ட மொகமது ஜஹுர் ஹாஸ்மி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 92.

"உமர் ஜான்", "கபி கபி" உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த கயாம், மூச்சு திணறல் உள்ளிட்ட உடல்நலக் குறைப்பாடுகள் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக காலை 10 மணி முதல் அவரது வீட்டில் வைக்கப்படும் என்றும் பின்னர் இறுதி சடங்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கயாமின் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி அவரது இசையமைப்பு எப்போதும் மக்கள் மனதில் நிலைத்து இருக்கும் எனக் கூறியுள்ளார். இளம் கலைஞர்களுக்கு ஆதரவளிப்பதற்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காகவும் அவர் நினைவு கூறப்படுவார் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். 

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், உள்ளிட்டோர் கயாமின் மறைவு இசைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என இரங்கல் தெரிவித்துள்ளனர். 2007ம் ஆண்டு சங்கீத் நாடக அகடமி விருது பெற்ற கயாமிற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் மூன்றாவது பெரிய சிவிலியன் விருது பத்ம பூஷண் வழங்கப்பட்டது.

இளம் கலைஞர்களை ஆதரிப்பதற்காக 2016ம் ஆண்டில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கிய கயாம் தமது சொத்து முழுவதையும் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com