“கொலை செய்யப்பட்டவருக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் தொடர்பில்லை” - குடும்பக் கொலையில் பிடிபட்ட குற்றவாளி

“கொலை செய்யப்பட்டவருக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் தொடர்பில்லை” - குடும்பக் கொலையில் பிடிபட்ட குற்றவாளி
“கொலை செய்யப்பட்டவருக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் தொடர்பில்லை” - குடும்பக் கொலையில் பிடிபட்ட குற்றவாளி

மேற்கு வங்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி பிடிபட்டார் என காவல்துறை தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்திலுள்ள ஜியாகாஞ் (Jiaganj) பகுதியைச் சேர்ந்தவர் போந்து கோபால் பால் (35). தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிப்புரிந்து வரும் இவர், தனது மனைவி பியூட்டி மற்றும் மகன் அங்கன் ஆகியோருடன் வசித்து வந்தார். இவர்கள் மூவரும் கடந்த அக்டோபர் 8ஆம் தேதி தங்களின் வீட்டில் மர்மான முறையில் இறந்து கிடந்தனர். இந்த மூவரின் உடலையும் கைப்பற்றிய மேற்கு வங்க காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்தச் சம்பவம் குறித்து முர்ஷிதாபாத் மாவட்ட காவல்துறை விசாரணை நடத்தினர். இதற்கிடையே கொலை செய்யப்பட்ட கோபால் பால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் என்றும், அவரை சிலர் மத ரீதியான காரணங்களுக்காக கொலை செய்துவிட்டதாகவும் தகவல் பரவியது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் தகவல் பரவியது. இதுஒரு அரசியல் ரீதியிலான கொலை என்று ஆளும் திரிணாமூல் அரசு மீது பாஜக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தது. மேற்குவங்க மாநிலத்தையே இந்த கொலைச் சம்பவம் உலுக்கியது.

ஆனால், உண்மையில் இந்தக் கொலை சம்பவத்தின் பின்னணியில் அரசியல் மற்றும் மதரீதியான காரணம் ஏதுமில்லை என போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அத்துடன் கொலை செய்யப்பட்ட கோபால் பகுதிநேரமாக இன்சூரன்ஸ் ஏஜெண்டாக பணியாற்றியதையும் கண்டுபிடித்துள்ளனர். 

இந்நிலையில், கொலையாளியை கண்டுபிடித்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் முர்ஷிதபாத் சகார்திகியின் சாஹாபூர் பகுதியை சேர்ந்த கொத்தனார் உத்பால் பெஹ்ரா. இவர் கோபாலிடம் இரண்டு ஆயுள் காப்பீடு திட்டத்தை தொடங்கியுள்ளார். அவை இரண்டிற்கு தவணைகளையும் கட்டியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட கோபால், ஒரு இன்சூரன்ஸிற்கான ரசீதை கொடுத்துவிட்டு, மற்றொன்றிற்கான ரசீதை கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. தனது பணத்தை கோபால் ஏமாற்றிவிட்டதாக உத்பால் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இதன் காரணமாகவே அவர் கோபால் மற்றும் அவர் குடும்பத்தினரை கொலை செய்துள்ளார். இவ்வாறு காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொலை செய்யப்பட்ட கோபாலுக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட கோபாலின் உறவினர்களும் இதை பகிரங்கமாக மறுத்திருப்பதுடன், தவறான தகவல்களை பரப்பியவர்களை கண்டித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com