ஆந்திரா: பச்சிளம் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வெட்டிக் கொலை!

ஆந்திரா: பச்சிளம் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வெட்டிக் கொலை!

ஆந்திரா: பச்சிளம் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வெட்டிக் கொலை!
Published on

ஆந்திராவில் இரண்டு வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், ஜுட்டாடா கிராமத்தை சேர்ந்த ராமாராவ் என்பவர் நேற்று இரவு தன்னுடைய வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த அப்பல்ராவ் என்பவர் இன்று அதிகாலை
ராமாராவ் வீட்டில் நுழைந்து ராமாராவ், அவருடைய மனைவி உஷா, அதே குடும்பத்தை சேர்ந்த ரமாதேவி, அருணா, 2 வயது மகன் உதய், இரண்டு மாத குழந்தை ஊர்நிஷா ஆகிய ஆறு பேரையும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அதே பகுதியில் தலைமறைவாக இருந்த அப்பல்ராவை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com