\
காதலை ஏற்க மறுத்த பெண்மீது தீ வைப்பு - ஒருதலைக்காதல் விபரீதம் 

காதலை ஏற்க மறுத்த பெண்மீது தீ வைப்பு - ஒருதலைக்காதல் விபரீதம் 

காதலை ஏற்க மறுத்த பெண்மீது தீ வைப்பு - ஒருதலைக்காதல் விபரீதம் 
Published on

காதலை ஏற்க மறுத்ததால் இளம் பெண்ணை உயிருடன் தீவைத்து எரித்த நபர் அதே நெருப்பில் ஏரிந்து உயிரிழந்துள்ளார். 

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் நிதின். இவர் காக்கநாடு பகுதியை சேர்ந்த 17வயது பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் தனது காதலை அந்தப் பெண்ணிடம் பலமுறை கூறிய போதும் அப்பெண் அதனை மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு அந்தப் பெண்ணின் வீட்டிற்கு நிதின் சென்றுள்ளார். 

அப்போது வீட்டின் கதவை அப்பெண்ணின் தந்தை திறந்துள்ளார். நிதின் அப்பெண்ணை பார்க்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அப்பெண் வெளியே வந்த உடன் அவர் மீது அவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி நிதின் தீ வைத்துள்ளார். அத்துடன் அவரும் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண்ணும் நிதினும் உயிரிழந்தனர். 

இந்தச் சம்பவத்தில் பெண்ணை காப்பாற்ற சென்ற தந்தை ஷாலன் நெருப்பில் சிக்கி படுகாயம் அடைந்தார். இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காதல் என்ற பெயரில் மற்றொரு கொலை சம்பவம் நடைபெற்று உள்ளது. இச்சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com