அடங்க மறுக்கும் பசு பாதுகாவலர்கள்.. மாட்டிறைச்சிக்காக மீண்டும் படுகொலை!

அடங்க மறுக்கும் பசு பாதுகாவலர்கள்.. மாட்டிறைச்சிக்காக மீண்டும் படுகொலை!

அடங்க மறுக்கும் பசு பாதுகாவலர்கள்.. மாட்டிறைச்சிக்காக மீண்டும் படுகொலை!
Published on

ஜார்கண்ட் மாநிலத்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றார் என்ற காரணத்துக்காக 45 வயது நகர் நடுரோட்டில் அடித்துக் கொல்லப்பட்டார். பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதமர் உரையாற்றிய சில மணிநேரங்களில் இந்தப் படுகொலை நடந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ராம்கரில் அலிமுதீன் என்கிற அஸ்கர் அன்சாரி தனது வேனில் இறைச்சி எடுத்துச் சென்றுள்ளார். பஜர்டண்ட் என்ற கிராமத்தில் வந்து கொண்டிருக்கும்போது 100க்கும் மேற்பட்டோர் அவர் வந்த காரை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர் வந்த வேன், தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. நடுரோட்டில் நடந்த இந்த கொலைவெறித் தாக்குதலால் அலிமுதீன் அந்த இடத்திலேயே மயங்கிவிழுந்தார். காவல்துறையினர் அலிமுதீனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்கள் கொல்லப்படுவதை ஏற்கமுடியாது என பிரதமர் உரையாற்றிய அதே நாளில் ஜார்கண்ட் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com