ஷாப்பிங் செய்த கொலைக் குற்றவாளி

ஷாப்பிங் செய்த கொலைக் குற்றவாளி
ஷாப்பிங் செய்த கொலைக் குற்றவாளி

உத்தரப் பிரதேசத்தில் கொலைக் குற்றாவாளி ஒருவர் நீதிமன்றத்திற்குச் செல்லும் வழியில் சாவகாசமாக ஷாப்பிங் சென்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கார் பகுதியில் உள்ள டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் ஒன்றில் அந்தக் கைதியை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வருகின்றனர். அவருக்கு கையில் விலங்கு எதுவும் மாட்டப்படாமல், சாவகாசமாக போலீஸ் பார்த்துக் கொண்டிருக்க ஷாப்பிங் செய்கிறார்.

அந்தக் கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கூட்டிச் சென்ற போலீசார் வழியில் அவர் ஷாப்பிங் செய்வதற்கு உதவியுள்ளனர். இந்த வீடியோ அந்தக் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது பரபரப்பாகப் பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com