பரப்பன அக்ரஹாராவில் 'துப்பாக்கி' வடிவிலான கேக் வெட்டும் கொலை குற்றவாளி

பரப்பன அக்ரஹாராவில் 'துப்பாக்கி' வடிவிலான கேக் வெட்டும் கொலை குற்றவாளி

பரப்பன அக்ரஹாராவில் 'துப்பாக்கி' வடிவிலான கேக் வெட்டும் கொலை குற்றவாளி
Published on

பெங்களுருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் கொலை குற்றவாளி ஒருவர் துப்பாக்கி வடிவிலான கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா, இளவரசி, உள்ளிட்டோர் பெங்களுருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த சில நாட்களாகவே பல்வேறு பிரச்னைகள் நிலவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அங்கு மற்றுமொரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, கியாத்தே சேட்டன் என்ற கொலை குற்றவாளிக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது பிறந்தநாளன்று துப்பாக்கி வடிவிலான கேக்கை வெட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த கேக்கை அதிகாரிகளே ஆர்டர் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அதிகாரிகளே அவருக்கு கேக் ஊட்டுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com