மரம் ஏறுவது எப்படி?: குட்டிக்கு கற்றுக்கொடுக்கும் தாய்க்கரடி - வீடியோ!
மரம் ஏறுவது எப்படி என தாய்க்கரடி கற்றுக்கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வனத்துறை அதிகாரி சுதா ராமென் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கரடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தாய்க்கரடி தன்னுடைய குட்டிக்கு மரமேற கற்றுக் கொடுக்கிறது.
இந்த வீடியோ குறித்து பதிவிட்டுள்ள அவர், தாய்க்கரடி மரம் ஏறுவது எப்படி எனக் சொல்லிக்காட்டுகிறது. நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் காடுகளிலேயோ அல்லது மலையிலேயோ இருந்தால் உங்களை யாராவது மரத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருப்பார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் இது நீலகிரியில் எடுக்கப்பட்ட வீடியோ என்றும் பதிவுசெய்தது யாரென்று தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வனத்துறை அதிகாரி பகிர்ந்த அந்த வீடியோ குறித்து பலரும் இது 'அழகான வீடியோ' என்றும், 'அம்மாவின் அன்பு' என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

