ஐஸ்கிரீம்
ஐஸ்கிரீம்Twitter

மும்பை: ஆன்லைனில் வாங்கிய ஐஸ்கிரீமில் மனித விரல்; வாடிக்கையாளர் அதிர்ச்சி

மும்பை: ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்ததால் போலீசார் விசாரணை

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஆன்லைனில் வாங்கிய ஐஸ்கிரீமுக்குள் மனித விரல். அதிர்ந்த வாடிக்கையாளர்.

மும்பை மலாடி பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒர்லாம் பிரெண்டன் செராவ் என்பவரின் பிறந்தநாளை ஒட்டி அவரது சகோதரி ஆன்லைனில் ஐஸ்கிரீம் ஆடர் செய்துள்ளார்.

ஐஸ்கிரீம்
மகாராஷ்டிரா| மகனின் வாயில் பேப்பரைத் திணித்துக் கொலை.. போதையில் தந்தை செய்த கொடூரம்!

ஐஸ்கிரீம் வந்ததும், இருவரும் ரசித்து சாப்பிட்டுள்ளனர். அச்சமயம் அப்பெண் பாதி ஐஸ்கிரீம் சாப்பிட்ட நிலையில் அவரது வாயில் ஏதோ ஒன்று தட்டுப்பட்டு இருக்கிறது. அது என்ன என்று எடுத்து பார்த்தவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம் ஐஸ்கிரீமில் மனித விரல் காணப்பட்டுள்ளது. இதை கண்டவர் அதிர்ந்துள்ளார்.

உடனே தனது சகோதரனிடம் தெரிவிக்கையில், அதை ஆராய்ந்த அவர், இது மனித விரல்தான் என்பதை உறுதிசெய்து உடனடியாக கமலாடு காவல் நிலையத்தில், ஐஸ்கிரீம் சப்ளை செய்த நிறுவனத்தின் மீது புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார் அந்த விரலை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியதுடன், நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com