\
மும்பை தாக்குதல் தினத்தில் பயங்கரவாதத்தை ஒழிக்க உறுதியேற்போம்: ராம்நாத் கோவிந்த்

மும்பை தாக்குதல் தினத்தில் பயங்கரவாதத்தை ஒழிக்க உறுதியேற்போம்: ராம்நாத் கோவிந்த்

மும்பை தாக்குதல் தினத்தில் பயங்கரவாதத்தை ஒழிக்க உறுதியேற்போம்: ராம்நாத் கோவிந்த்
Published on

அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை ஒழிக்க உறுதியேற்போம் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மும்பை தாக்குதலின் 9ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். இந்நாளில் அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை ஒழிக்க உறுதியேற்போம் என்றும் நம்முடைய மக்கள், நாடு, உலகம் பாதுகாப்பாக இருக்க உறுதியேற்போம் என்றும் குடியரசுத்தலைவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.3 நாட்கள் நீடித்த இத்தாக்குதல் 166 பேர் உயிரிழந்தனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com