வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை மாநகர் - இனி வரும் நாள்களில் வானிலை எப்படி?

வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை மாநகர் - இனி வரும் நாள்களில் வானிலை எப்படி?

வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை மாநகர் - இனி வரும் நாள்களில் வானிலை எப்படி?

மும்பையில் நான்காவது நாளாக பெய்துவரும் கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் பெய்துவரும் கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் மும்பையில் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் அம்மாநிலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

கனமழை மற்றும் நிலச்சரிவு ஆகியவை காரணமாக இதுவரை மகாராஷ்டிராவில் ஐந்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் முக்கிய நீர்நிலைகளில் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் மாநிலம் முழுவதும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இன்றைய தினம் மும்பை நகரத்தில் பெரிய அளவு தண்ணீர் தேங்காததால் விபத்து உள்ளிட்ட சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே மழை வெள்ள பாதிப்பை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கிருப்பதால் நேற்றைய தினம் ரயில் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மத்திய ரயில்வே மற்றும் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் ஆகியவை இணைந்து தண்ணீரை அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக இன்று ஒரு சில ரயில் சேவைகளை தவிர்த்து பெரும்பாலான ரயில்கள் முழுமையாக இயக்கப்பட்டது.

மேலும் இந்திய வானிலை ஆய்வு மையம் மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நாளை வரை 'ரெட் அலர்ட்' விடுத்து இருக்கிறது. இதனால் நாளை மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை தெற்கு கொங்கன், கோவா மற்றும் தெற்கு மத்திய மகாராஷ்டிராவிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது.

மகராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தவரையில் உள்ளூர் ரயில்கள் மட்டும் சில தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே தெரிவித்து இருக்கிறது. அந்தேரி, மாட்டுங்கா போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று  அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

இதையும் படிக்கலாம்: 2 வருடத்தில் 21 பேரை கொன்ற 'Man Eater' பெண் புலி - வனத்துறையிடம் சிக்கியது எப்படி?





Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com