’கிழிந்த ஆடை கூடாது’- மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்த கல்லூரி; நீதிமன்றத்தை அணுகிய மாணவர்கள்!

மும்பையில் உள்ள தனியார் கல்லூரி, மாணவர்களுக்கான ஆடை கட்டுப்பாடு விதித்துள்ளதை அடுத்து மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
கல்லூரி மாணவர்கள் மாதிரி படம்
கல்லூரி மாணவர்கள் மாதிரி படம்கூகுள்

மும்பையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று, மாணவர்களுக்கான ஆடை கட்டுப்பாடு விதித்துள்ளது.

கல்லூரி செல்லும் மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான, வசதியான ஆடைகளை அணிந்து செல்வது வழக்கமான ஒன்று. இதில் சில மாணவர்கள் நாகரீகம் என்ற பெயரில் வினோதமான ஆடைகளை அணிந்து செல்வது வேடிக்கையாக இருக்கும்.

இதற்கெல்லாம் எண்ட் கார்டு போடும் வகையில் மும்பையில் உள்ள ஒரு கல்லூரி, மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

மும்பை செம்பூர் டிராம்பே எஜுகேஷன் சொசைட்டியின் NG ஆச்சார்யா மற்றும் DK மராத்தே கல்லூரியின் முதல்வர், வித்யாகௌரி லேலே, சமீபத்தில் அவரது கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதன்படி, தங்களது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், கிழிந்த ஜீன்ஸ், டி-சர்ட்கள், ஜெர்சிகள், திறந்த வகையான ஆடைகள் மற்றும் மதத்தை வெளிப்படுத்தும் அல்லது கலாச்சார வேறுபாட்டைக் காட்டும் ஆடைகளை அணிவதற்கு தடை விதித்து மாணவர்களுக்கு சுற்றறிக்கை விடுத்துள்ளது.

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சுற்றறிக்கையில், கல்லூரிக்கு படிக்கவரும் மாணவர்கள் முறையான மற்றும் கண்ணியமான ஆடைகளை அணியுமாறு அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் அரை சட்டை அல்லது முழு சட்டை மற்றும் கால் சட்டை, அணியலாம் என்றும், ஜீன்ஸ், டி-சர்ட், வெளிப்படை ஆடைகள் மற்றும் ஜெர்சிகளை அணிய வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மாணவிகள் இந்திய மற்றும் மேற்கத்திய ஆடைகளை அணியுமாறு அறிவுறுத்தியுள்ளது.

அதே போல் கல்லூரிக்குள் நுழையும் பொழுது, ஹிஜாப், புர்கா, நகாப், ஸ்டோல்ஸ், தொப்பிகள் மற்றும் பேட்ஜ்களை தரை தளத்தில் உள்ள அறைகளில் அகற்றிவிட்டு, கல்லூரிக்குள் நுழையவேண்டும் என்றும், கல்லூரியை விட்டு வெளியேறும் போது மீண்டும் அவைகளை அணிந்துக்கொள்ளலாம் என்றும் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த கல்லூரிகள் ஹிஜாபை தடை செய்த கல்லூரிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிஜாப், புர்கா மற்றும் நகாப் போன்ற விதிகள் மாணவர்களின் அடிப்படை விதிகளை மீறுவதில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, கல்லூரி வளாகத்தில் ஹிஜாப், புர்கா மற்றும் நகாப் ஆகியவற்றிற்கு தடை விதிக்கும் முடிவில், ஜூன் 26 அன்று, மும்பை உயர்நீதிமன்றம் தலையிட மறுத்தது. இதை அடுத்து கல்லூரி முதல்வர் மாணவருக்கு சுற்றறிக்கை அனுப்பியது.

வளாகத்திற்குள் இஜாப், நகாப், புர்கா, ஸ்டோல்கள், தொப்பிகள் மற்றும் பேட்ஜ்களை தடை செய்யும் ஆடைக் கட்டுப்பாட்டை விதித்து கல்லூரி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாணவர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com