மகாராஷ்டிரா மாநிலம்
மகாராஷ்டிரா மாநிலம்முகநூல்

ஆட்டோவில் நாயை விட்டு கடிக்க வைத்த நபர்; சில மணி நேரத்திலேயே விடுவிப்பு! சிறுவன் சொன்னது என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சிறுவன் மீது நாயை விட்டு கடிக்க வைத்து ரசித்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்போது நடந்தது என்ன என்று பாதிக்கப்பட்ட சிறுவன் தெரிவித்துள்ளார்.
Published on

மராட்டிய தலைநகர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சோகைல் ஹூசைன். இவர் வெளிநாட்டு வகையை சேர்ந்த ‘பிட்புல் வகை ‘ நாய் ஒன்றை வளர்த்துவருகிறார். ஒருநாள் தனது நாயோடு மன்கர்த் அருகே காரில் சென்றுகொண்டிருந்தார் . அப்போது கார் திடீரென பழுதானதால் காரிலிருந்து தனது நாயோடு இறங்கிய அவர், போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறினார்.

நாயோடு இவர் ஏறுவதை கண்ட ஆட்டோவில் இருந்த சிறுவர் சிறுமியர் சிலர் உடனடியாக ஆட்டோவை விட்டு தப்பி சென்றனர். ஆனால், 11 வயது ஹம்சா என்ற சிறுவன் மட்டும் அந்த ஆட்டோவில் சிக்கி கொண்டான். இதனை தொடா்ந்து சோகைல் ஹுசைனின் நாய், ஆட்டோவில் ஏறி அந்த சிறுவனை நெருங்கியது.

மேலும் கண் இமைக்கும் நேரத்தில் சிறுவனை கடித்து குதற தொடங்கியது. தனது நாயை தடுக்காமல் சோகைல் சிரித்தார். ஒருகட்டத்தில் அலறி துடித்து ஆட்டோவில் இருந்து எகிறி குதித்து சிறுவன் ஓட்டம் பிடிக்க அந்த நாயும் விடாமல் துரத்தியது.

மகாராஷ்டிரா மாநிலம்
ஜகதீப் தன்கர் ராஜினாமா.. பாஜக தேர்வு செய்யப் போகும் அடுத்த நபர் யார்?

இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியானது. இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை, தொழிலதிபர் சோகைல் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த சோகைலை கைது செய்தனர். கைதான சில மணி நேரங்களில் சோகைல் ஜாமினில் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாய் கடித்ததில் சிறுவனின் கை, தாடை உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவன், மற்றவர்கள் தப்பித்து விட்டதாகவும் ஆனால், தன்னை நாய் கடித்துவிட்டதாகவும், மிகவும் பயந்ததாகவும் மிகுந்த பயத்தோடு தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "நாங்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். என் நண்பர்களில் ஒருவர் (குற்றம் சாட்டப்பட்ட நாய் உரிமையாளரிடம்) பிட் புல்லுடன் எங்கே போகிறீர்கள் என்று கேட்டார். அவர் நாயுடன் எங்களை நோக்கி வரத் தொடங்கினார். எல்லோரும் தப்பினர், ஆனால் என்னால் முடியவில்லை... அவர் நாயை என்னை நோக்கி விடுவித்து சிரித்தார். நாய் என்னைக் கடித்தது, பின்னர் நான் ஓடினேன். அது என் ஆடைகளையும் பிடித்துக் கொண்டது... நான் மிகவும் பயந்தேன்..." என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com