\
அடப்பாவிகளா: 1 முறுக்குக்கு இப்படியா பண்ணுவீங்க?

அடப்பாவிகளா: 1 முறுக்குக்கு இப்படியா பண்ணுவீங்க?

அடப்பாவிகளா: 1 முறுக்குக்கு இப்படியா பண்ணுவீங்க?
Published on

முறுக்கைத் தின்று விட்டு காசில்லை என்ற சிறுவர்களை நிர்வாணப்படுத்தி, மொட்டை அடித்து செருப்புமாலை அணிவித்த கடைகாரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தானே அருகிலுள்ள உல்லாஸ்நகர் பிரேம் தேக்டி பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் மெகமூத் பதான் (65). இவரது மகன்கள் இர்பான் (20), சலீம் (22). இதே பகுதியை சேர்ந்த 8 மற்றும் 9 வயது சிறுவர்கள் கடையின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது கடையில் இருந்த முறுக்கைப் பார்த்ததும் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்தது. பாட்டிலில் இருந்த முறுக்கை எடுத்து இருவரும் தின்றனர். அதற்கான காசு ஒரு ரூபாய். கடைக்காரர் துட்டு கேட்டார். இல்லை என்றனர் சிறுவர்கள்.

இதனால் கோபமடைந்த மெகமூத் தனது மகன்களை அழைத்தார். இரண்டு சிறுவர்களின் தலைமுடிகளை மொட்டை அடித்தார். உடைகளை கழற்றி செருப்பு மாலை அணிவித்து தெருவில் ஊர்வலம் போகச் சொன்னார். அதை வீடியோவாக எடுத்து அந்த பகுதியிலுள்ள குரூப்களில் பகிர்ந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தால் கண்ணீர் விட்டு கதறிய சிறுவர்கள் வீட்டில் வந்து கூறினர். கூலி வேலைப் பார்க்கும் அவர்கள் பெற்றோர், உல்லாஸ்நகர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து சிறுவர்களை கொடுமைப்படுத்திய அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com