\
தடம் புரண்டது ஹவுரா மெயில்!

தடம் புரண்டது ஹவுரா மெயில்!

தடம் புரண்டது ஹவுரா மெயில்!
Published on

கொல்கத்தாவுக்கு சென்ற ஹவுரா மெயில் ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டது. 

மும்பையில் இருந்து கொல்கத்தாவுக்கு ஹவுரா மெயில் ரயில் தினமும் சென்று வருகிறது. 12840 என்ற எண் கொண்ட இந்த ரயில் நேற்றும் வழக்கம் போல் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது. மகாராஷ்டிரா மாநிலம் இகாத்புரி ரயில்வே ஸ்டேஷன் அருகே இன்று அதிகாலை வந்தபோது, ரயிலின் 3 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. 

இதையடுத்து பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த ரயில் தடம்புரண்டதால் இந்த வழியாக செல்ல வேண்டிய 12 ரயில்கள் கேன்சல் செய்யப்பட்டுள்ளன.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com